--- --:--:-- --

தமிழகத்தில் வெயில் தாக்கம் அதிகரிக்கும் – வானிலை மையம்

1

மிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வரும் 16ஆம் தேதி வரை மிக லேசான மழையும், 17ஆம் தேதி மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேநேரத்தில், 15ஆம் தேதி வரை, தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

 

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon