--- --:--:-- --

நெருக்கடி கொடுப்பது பா.ஜ.க-வின் பழக்கம் – த.வெ.க நிர்வாகி நாஞ்சில் சம்பத் ஓபன் டாக்

6

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய த.வெ.க நிர்வாகி நாஞ்சில் சம்பத்திடம் பா.ஜ.க நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், “நெருக்கடி கொடுப்பது அவர்களுடைய (பா.ஜ.க) பழக்கம் .

 

நெருக்கடியை எதிர்கொள்வது எங்களுடைய வழக்கம்; விஜய் திரைப்படத்தின் தனிக்கையை நிறுத்திவைத்திருப்பது அவர்களுடைய வக்கிரமான அரசியல். பராசக்திக்கு அனுமதி கொடுத்தவர்கள் ஜனநாயகனுக்கு கொடுக்கவில்லை. அதை மக்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள்.

 

ஆகவே, நெருக்கடிகள் வரலாம். அந்த நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நெஞ்சுரம் எங்கள் தலைவர் விஜய்க்கு இருக்கிறது” என்று கூறினார்.

Right Menu Icon