--- --:--:-- --

இன்று எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்பு..!

4

தென் தமிழ்நாட்டில் மார்ச் 4ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 27ஆம் தேதி தென் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

 

28 மற்றும் மார்ச் 1ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் 2ஆம் தேதி தென் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில், லேசான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

3ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் 4ஆம் தேதி தென் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 27ஆம் தேதி வட தமிழ்நாட்டின் கடலோர பகுதிகள் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Right Menu Icon