--- --:--:-- --

த.வெ.க குறித்த கருத்துக்கு அமைச்சர் ரகுபதி பதில்

9

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருக்கிறதா? இல்லையா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகாமல் இழுபறியாகவே நீடித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி த.வெ.க.வுடன் கூட்டணி அமைப்பதாக கிரிஷ் சோடங்கர் பேசுவதெல்லாம் கருத்தல்ல என்று தி.மு.க அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

 

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதிப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. இதில் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜ.க, பா.ம.க, த.மா.க, அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகளுடனான கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து அடுத்து தொகுதிப்பங்கீடு குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. ஆனால் தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

 

தி.மு.க. கூட்டணியில், வி.சி.க, கம்யூனிஸ்ட், ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கூட்டணியை உறுதி செய்துள்ளது. அதே சமயம், காங்கிரஸ் கட்சி கடந்த சில மாதங்களாக ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டதால், தி.மு.க. கூட்டணியில் நீடிக்குமா? அல்லது த.வெ.க கூட்டணிக்கு செல்லுமா என்ற கேள்வி எழுந்தது.

 

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், கூட்டணி குறித்து யாரும் பொதுவெளியில் பேச வேண்டாம் என்று உத்தரவிட்டதை தொடர்ந்து, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கேரிக்கை கைவிடப்பட்டது.

 

இதனிடையே, கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தி.மு.க – காங்கிரஸ் இடையே இழுபறி நீடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி த.வெ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறியது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ரகுபதி, சோடங்கர் பேசுவது எல்லாம் கருத்தல்ல, ராகுல்காந்தி – மு.க.ஸடாலின் பேசுவது மட்டும் தான் முடிவு. இந்தியாவில் எந்த அரசியல் கட்சி தலைவரும் எங்கள் தலைவரை போல் கூட்டணி கட்சிகளை அனுசரித்து போக மாட்டார்கள்.

 

விட்டுக்கொடுக்கும் எங்கள் தலைவருக்கு எப்போதும் கெடுதல் வராது. திராவிட மாடல் 2.0 மட்டும் அல்ல 3.0-வும் தொடரும் என்று கூறியுள்ளார். தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியில் தொடருந்து இழுபறி அதிகரித்து வரும் நிலையில், சில முக்கிய நிர்வாகிகள், த.வெ.கவுடன் காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், சிலர் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் தொடரும் என்றும் கூறி வருவது பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இதனிடையே த.வெ.க.வுடன் கூட்டணி என்று கூறியது கிரிஷ் சோடங்கரின் சொந்த கருத்து. கூட்டணி குறித்து ராகுல்காந்தி, கார்கே, சோனியா காந்தி ஆகியோர் தான் முடிவு செய்ய வேண்டும். தற்போது இருப்பது வலிமையான கூட்டணி என்று காங்கிரஸ் எம்.பி.விஜய் வசந்த் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon