--- --:--:-- --

மருமகளுக்கு பாலியல் துன்புறுத்தல்.. மாமனாரை எரித்து கொல்ல முயற்சி..!

10

ண்ருட்டி அருகே உள்ள மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (69). விவசாயியான இவர் நேற்று இரவு 7.15 மணியளவில் அதே ஊரை சேர்ந்த கந்தன் என்பவரது இரு சக்கர வாகனத்தில் பண்ருட்டிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மினி வேனில் வந்த சிலர் ராஜேந்திரன் வந்த இருசக்கர வாகனத்தை வழிமறித்து அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடினர்.

 

ராஜேந்திரன் உடல் முழுவதும் தீ பரவிய நிலையில் அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.மேல் சிகிச்சைக்காக ராஜேந்திரன் கடலூர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர்கள் வேல்முருகன், தங்கவேலு மற்றும் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்தனர். மேலும், முதியவர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்ற மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர்.

 

முதியவர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்றது ஏன்? முன்விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த கடலூர் போலீஸ் எஸ். பி. ஜெயக்குமார், பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா ஆகியோர் விசாரணையை முடுக்கிவிட்டனர்.

 

4 தனிப்படை அமைத்து மர்ம ஆசாமிகளை தேடும் பணியை தீவிரப்படுத்தினர். தனிப்படை போலீசார் வாகன சோதனையில் முதியவரை எரித்துக் கொல்ல வந்த மினி வேன் சிக்கியது. மினி வேனில் வந்த மர்ம ஆசாமிகளை போலீசார் விசாரணை செய்ததில் பல தகவல்கள் வெளியானது.

 

அதாவது, முதியவர் ராஜேந்திரன் தனது மருமகளிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றதால் மருமகள் ஏற்பாட்டின் படி மருமகளின் கள்ளக்காதலன் பண்ருட்டியை சேர்ந்த மணிகண்டன் ( 37), அவரது நண்பன் குபேந்திரன் (36 ), போட்டோ ஸ்டுடியோ அதிபரும் மாவட்ட பா.ஜ.க நிர்வாகியுமான சித்திரை சாவடி பார்த்திபன் (35) ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

 

இதனை தொடர்ந்து இவர்கள் மூவரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த பண்ருட்டி போலீசாரை கடலூர் எஸ்.பி ஜெயக்குமார் பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Right Menu Icon