நான்கரை ஆண்டுகளில் 7500 படுகொலைகள் – அன்புமணி ராமதாஸ்
பண்ருட்டி அருகே ஒரு விவசாயி உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவத்தை குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்தார். அவர் கூறியதாவது, “தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின் கடந்த நான்கரை ஆண்டுகளில் மட்டும் 7,500 படுகொலைகள் நிகழ்ந்துள்ளன.
சட்டம் மற்றும் ஒழுங்கை இத்தளவிற்கு சீர்குலைத்ததற்காக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டியது அவசியம். காயமடைந்த விவசாயிக்கு சிறப்பான மருத்துவம் அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் அவருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும் வழங்கப்பட வேண்டும்.”





