ஓ.பி.எஸ். வீட்டில் காலையில் திடீரென கூடிய தொண்டர்கள்..!
தேனி பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ் இல்லத்திற்கு இன்று காலை முதலே ஆதரவாளர்கள் குவியத் தொடங்கினர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
குறிப்பாக, நேற்றைய தினம் அதிமுக இணைப்பிற்குத் தான் தயார் என்று ஓபிஎஸ் விடுத்த அழைப்பை எடப்பாடி பழனிசாமி நிராகரித்த சூழலில் இந்தக் கூட்டம் கூடியுள்ளது. தனது அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.





