நீக்கப்பட்ட ‘தமிழ்நாடு’ என்ற வார்த்தையை மீண்டும் சேர்க்க உத்தரவிடக் கோரிய பொது நல மனு..!
தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் நீக்கப்பட்ட ‘தமிழ்நாடு’ என்ற வார்த்தையை மீண்டும் சேர்க்க உத்தரவிடக் கோரிய பொதுநல மனு மீது அரசிடம் உரிய விளக்கம் பெற்றுத் தெரிவிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
பேருந்துகளில் தமிழ்நாடு என வார்த்தை நீக்கப்பட்டது குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கக்கோரி செல்வகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.






