பொங்கல் பரிசுத் தொகுப்பு.. 8ஆம் தேதி தொடங்கி வைக்கும் முதலமைச்சர்..!
பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை வரும் 8ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரசின் தரப்பில் தற்போது வரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. <div>அதேசமயம், எதிர்க்கட்சியினர் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 5,000 வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். கடந்த வருடமும் ரொக்கம் வழங்காததால், இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு ரொக்கம் குறித்து அறிவிக்குமா என பொதுமக்கள் தரப்பில் இருந்தும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இருப்பினும் இன்று அல்லது நாளை ரொக்கப் பணம் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக தனி அரசாணையும் பிறப்பிக்கப்படும் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தான் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை வரும் எட்டாம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை சென்னையில் முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.





