அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் வரும் 22 ஆம் தேதி அமைச்சர்கள் பேச்சுவார்த்தை..!
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் வரும் 22ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டம், காலிப் பணியிடங்களை நிரப்புவது என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த கோரிக்கைகள் தொடர்பாக வரும் 22 ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் வைத்து பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையில் மூலம் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு சுமூக முடிவு எட்டப்படும் எனத் தெரிகிறது. கடந்த சனிக்கிழமையன்று சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரத போராட்ட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஜனவரி 6 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




