--- --:--:-- --

12 நாட்கள் பள்ளிகள் தொடர் விடுமுறை..!

3

மிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் அரையாண்டுத் தேர்வு முடிந்ததும் விடுமுறை விடப்படும். வழக்கமாக 9 நாட்கள் விடுமுறை விடப்படும். 9 நாட்கள் என்பதே அதிகபட்சமாக விடுமுறை விடப்பட்டிருந்தது.

 

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான அரையாண்டுத் தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில், பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் 24 முதல் அரையாண்டு விடுமுறை விடப்படவுள்ளதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. மழை காரணமாக விடப்பட்ட விடுமுறைக்கு ஈடுகட்டும் விதமாக அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து முன்பாகவே பள்ளிகள் திறக்கப்படுவதாக வெளியான தகவலை பள்ளிக் கல்வித்துறை மறுத்துள்ளது.

 

10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 10-ந்தேதி தேர்வுகள் தொடங்கிய நிலையில், 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேற்று முதல் தேர்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. அனைத்து வகுப்புகளுக்கான தேர்வுகளும் வரும் 23ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் இதற்கான விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

அதன்படி மாணவர்களுக்கு 12 நாட்கள் அரையாண்டுத் தேர்வு விடுமுறை விடப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. அந்த வகையில் டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 4ஆம் தேதி வரை தொடர் விடுமுறை விடப்படவுள்ளது.

 

விடுமுறை முடிந்து ஜனவரி 5ஆம் தேதி வகுப்புகள் மீண்டும் தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு உள்ளிட்டவை முடிந்த பிறகே பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.

 

இந்நிலையில், மழை காரணமாக விடப்பட்ட விடுமுறைக்கு ஈடுகட்டும் விதமாக பள்ளிகள் ஜனவரி 2 ஆம் தேதி முன் கூட்டியே திறக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. இதனை மறுத்துள்ள பள்ளிக் கல்வித்துறை, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல் அரையாண்டு விடுமுறைக்குப் பின் ஜனவரி 5 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Right Menu Icon