--- --:--:-- --

பஹல்காம் தாக்குதல்: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த என்.ஐ.ஏ

7

காஷ்மீரின் சுற்றுலா தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் 22-ந் தேதி பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

 

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா, தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் பயங்கரவாத அமைப்பு உட்பட 7 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

சம்பவம் நடந்து 8 மாதத்துக்கு பிறகு முழுமையான விசாரணைக்கு பின்னர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Right Menu Icon