எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம் – கமல்ஹாசன் எக்ஸ் பதிவு
எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம் எல்லாரும் இந்திய மக்கள், எல்லாரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை எல்லாரும் இந்நாட்டு மன்னர் – என அனைவரையும் உள்ளடக்கிய வலிமையான இந்தியாவைக் கனவு கண்ட மகத்தான கவிஞன் பாரதியின் பிறந்த நாள் இன்று.
டிசம்பர் குளிரில் இந்தியத் திருநாட்டின் நாடாளுமன்ற வளாகத்தில் நின்றபடி மகாகவியின் சொற்களை மனதில் ஏந்துகிறேன். – என்று கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.





