--- --:--:-- --

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை..!

2

சேமிப்பின் அடையாளமாக திகழ்ந்து வரும் தங்கமும், வெள்ளியும் போட்டி போட்டு கொண்டு உயர்ந்து புதிய வரலாறு காணாத விலையை தொட்டு வருகிறது.டிசம்பர் மாத தொடக்கத்திலேயே தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதன் பிறகு தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.

 

கடைசியாக கடந்த சனிக்கிழமை தங்கம் விலை மாற்றம் செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து 3 நாட்கள் அதே விலையே நீடித்து வந்தது. நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.12,040க்கும், ஒரு சவரன் ரூ.96,320க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

தொடர்ந்து இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதன் படி, இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.12,000க்கும் சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.96,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.10,000க்கும் சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.80,000க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.199க்கும், ஒரு கிலோ ரூ.1,99,000க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

Right Menu Icon