அதிமுகவில் இணையும் செங்கோட்டையனின் அண்ணன் மகன்!
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் அண்ணன் மகன் கே.கே.செல்வம் அதிமுகவில் இணையவிருக்கிறார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அண்மையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தார். செங்கோட்டையனின் அண்ணன் காளியப்பன் மகன் கே.கே.செல்வம் அதிமுகவில் இணையவிருக்கிறார்.
திமுகவில் இருந்த கே.கே.செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணையவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஈபிஎஸ் முன்னிலையில் நாளை அவர் அதிமுகவில் இணையலாம் எனக் கூறப்படுகிறது. இவர் திமுகவில் சுற்றுச்சூழல் அணி மாவட்டச் செயலராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அண்மையில் திமுகவில் இருந்து செல்வம் நீக்கப்பட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




