திருவாடானை அருகே பாதையை ஆக்கிரமித்து மின்கம்பங்கள் ஊன்றப்பட்டுள்ளதால் மக்கள் அவதி
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே நெடுமரம் கிராமம் உள்ளது. இங்கு 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் திருவாடனை மின்வாரியத்தால் தனி நபர் ஒருவருக்கு மின் இணைப்பு கொடுக்க பத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாலையில் ஆக்கிரமித்து உண்டப்பட்டுள்ளது. அப்படி சாலையை ஆக்கிரமித்து ஊன்றப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
சாலை ஏற்கனவே சேதம் அடைந்துள்ள நிலையில் அவ்வழியாக இரண்டு சக்கர வாகனத்தில் கூட செல்ல முடியாத அவலநிலை இருப்பதாக கவலை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஜெயமாதவன் கூறுகையில் திருவாடானை மின் மாறிய அதிகாரிகள் போதுமான இடவசதி இருந்தும் வேண்டுமென்றே பாதையில் ஆக்கிரமித்து மின்கம்பங்களை ஊன்றிவிட்டனர்.
இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் மின்வாரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். பாதையில் செல்ல பெரும் இடையூறாக மின்கம்பங்கள் இருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து இடையூறாக உள்ள மின்கம்பங்களை அகற்றி தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்
📱 Share on WhatsApp 𝕏 Share on X




