கொசஸ்தலை ஆற்றுக்கு உபரிநீர் திறப்பு அதிகரிப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை
டிட்வா புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருப்பதால் முன்னெச்சரிக்கையாக பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திலிருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு திறக்கப்பட்ட உபரி நீர் 1500 கன அடியிலிருந்து 2500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ, மீன் பிடிக்கவோ, செல்ஃபி எடுத்து விளையாடவோ கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




