--- --:--:-- --

இனி விமானத்தில் இருமுடியுடன் பயணிக்கலாம்..!

3

லக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் சீசன் தொடங்கியுள்ளதால் பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர். கார்த்திகை மாதம் தொடங்கிய நிலையில் தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கூட்டத்தை கட்டுப்படுத்த தேவசம்போர்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

சபரிமலை வரும் பக்தர்கள் மண்டல விரதம் இருந்து இருமுடி சுமந்து 18 படி ஏறி தரிசனம் செய்வது வழக்கம். பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து கேரளாவிற்கு வரும் பக்தர்கள் காரிலோ, வேனிலோ, பேருந்திலோ, ரயிலிலோ பயணம் செய்வார்கள். சமீபத்தில் தான் ஆம்னி பேருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் சற்று சிரமத்திற்கு ஆளாகினர்.

 

விமானத்தில் பயணிக்கலாம் என்றால் இருமுடியை விமானத்தில் எடுத்து செல்வது தொடர்பாக சர்ச்சை நிலவி வந்தது. இந்த நிலையில் இருமுடி பைகளை பக்தர்கள் கொண்டு செல்ல மத்திய அரசு சிறப்பு அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராமமோகன் நாயுடு எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், விமானங்களில் ஐயப்ப பக்தர்கள் தங்களுடன் இருமுடியை எடுத்து செல்ல அனுமதிப்பது என மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் முடிவு செய்துள்ளது. பக்தர்களின் பாரம்பரிய பழக்க வழக்கங்கள் பாதிக்கப்படாமல் இருப்பது உறுதி செய்யப்படும். தேவையான அனைத்து பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படும் என தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon