--- --:--:-- --

இஸ்லாமிய கைதிகளுக்கு நீண்ட கால விடுப்பு – ஜவாஹிருல்லா கோரிக்கை

6

சுமார் கால் நூற்றாண்டு காலம் சிறை வாழ்க்கை அனுபவித்த 21 இஸ்லாமிய கைதிகளுக்கு பரோல் எனும் நீண்ட கால விடுப்பு வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசுதான் முடிவெடுக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்து, கருணையுடன் செயல்படும் மாநில அரசு அந்த கைதிகளை ம்முன் விடுதலை செய்வதற்கு பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

 

இந்த தீர்ப்பின் அடிப்படையில் அவர்களுக்கு பரோல் வழங்கவும், முன் விடுதலை செய்யவும் முதலமைச்சர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.

Right Menu Icon