சேலத்தில் விஜய் பிரச்சார கூட்டம் நடத்த அனுமதி மறுப்பு!
சேலத்தில் டிசம்பர் 4-ம் தேதி தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் நடத்த காவல் துறை அனுமதி மறுத்துள்ளனர். டிசம்பர் 4-ம் தேதி கார்த்திகை தீபம் என்பதால் திருவண்ணாமலையில் நடைபெறும் கிரிவல நிகழ்ச்சிக்கு சேலம் மாநகர போலீஸார் பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
அதேபோல, டிச.6-ம் தேதி பாபர் மசூதி இடிப்பு நினைவு தினத்தையொட்டி, அடுத்து வரும் நாட்களில் மாநகரம் முழுவதும் போலீஸார் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
எனவே, விஜய் தேர்தல் பிரச்சார கூட்டத்துக்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள இயலாத நிலை ஏற்பட்டும் என்பதால், விஜய் தேர்தல் பிரச்சார கூட்டத்துக்கு டிசம்பர் 4-ம் தேதி அனுமதி மறுக்கப்பட்டது.





