முதல்வர் ஸ்டாலின் செயலால் கண்கலங்கி நின்ற திமுக நிர்வாகி..!
தனது தந்தையிடம் முதல்வர் செல்போனில் பேசியதை கண்டு திமுக ஒன்றியச் செயலாளர் கண் கலங்கி நின்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் திமுக நிர்வாகிகளை நேரில் சந்தித்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொகுதி நிலவரம் குறித்து கேட்டறிந்தும் பல்வேறு ஆலோசனை மற்றும் அறிவுரைகளை நிர்வாகிகளுக்கு வழங்கியும் வருகிறார்.
அதன்படி முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த ஆலங்குளம் ஒன்றியச் செயலாளர் செல்வகுமார், தனது தந்தை 1967 முதல் திமுகவில் இருப்பதாகவும், தங்களுடன் புகைப்படம் எடுக்க அழைத்து வரலாமா எனக் கோரினார். உடனடியாக தந்தைக்கு அழைக்குமாறு கூறிய முதல்வர், செல்வக்குமாரின் தந்தையிடம் பேசி சென்னை வருமாறு கூறினார். இதைக் கண்டு ஒன்றியச் செயலாளர் கண் கலங்கி நின்றார்.
முன்னதாக அதிமுகவினருடனான தொடர்பில் இருந்ததாக கோவை மாவட்டம் சுல்தான் பேட்டை ஒன்றியச் செயலாளர் பி.வி.மகாலிங்கத்தின் பதவியை பறித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் உடனான ஒன் டூ ஒன் ஆலோசனை நடத்திய பின் பிவி மகாலிங்கத்தின் பதவியை பறித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




