மகேஷ் பாபு-ராஜமௌலி கூட்டணி படப்பெயர் அறிவிப்பு
ஆர்.ஆர்.ஆர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி நடிகர் மகேஷ் பாபுவை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இதில், நாயகியாக பிரியங்கா சோப்ராவும் வில்லனாக பிருத்விராஜும் நடித்து வருகின்றனர்.
இதன் படப்பிடிப்பு பல பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் பெயர் அறிவிப்புக்கான நிகழ்வு ஹைதராபாத்திலுள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில், படத்திற்கு வாரணாசி எனப் பெயரிட்ட டீசரை வெளியிட்டுள்ளனர். காசியை மையமாக வைத்து புராணத்துடன் கூடிய கதையாக இது உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.






