இன்று நகை வாங்குபவர்களுக்கு ஜாக்பாட்..!
தீபாவளி பண்டிகைக்கு முன்பு ரூ.1 லட்சத்தை நெருங்கிய ஒரு சவரன் தங்கம் விலை அதன் பிறகு படிப்படியாக குறைந்தது. தொடர்ந்து நவம்பர் மாதம் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 2 முறை தங்கம் விலை அதிரடியாக குறைந்ததால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
அதன் படி நேற்று மாலை (நவம்பர் 14) 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.11,740க்கும் சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.93,920க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்றும் தங்கம் விலை குறைந்தது நகை பிரியர்களுக்கு வரபிரசாதமாக அமைந்துள்ளது. 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.190 குறைந்து ஒரு கிராம் ரூ.11,550க்கும் சவரனுக்கு ரூ.1,520 குறைந்து ஒரு சவரன் ரூ.92,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து ஒரு கிராம் ரூ.9,640க்கும் சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ஒரு சவரன் ரூ. 77,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் ஒரே நாளில் அதிரடியாக கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.175க்கும் ஒரு கிலோ ரூ.1,75,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.






