--- --:--:-- --

சென்னை, ஆந்திராவில் மழை.. காய்கறி விலை அதிரடியாக உயர்வு..!

9

மிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் பெய்த கனமழை காரணமாக காய்கறி வரத்து குறைந்து, கோயம்பேடு சந்தையில் பெரும்பாலான காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. பீன்ஸ், அவரைக்காய், கேரட் போன்ற காய்கறிகள் சில்லறை விலையில் ஒரு கிலோ 125 ரூபாய் வரை விற்பனையாகின்றன.

 

.மழை காரணமாக காய்கறிகளை அறுவடை செய்வதிலும், சேமித்து வைப்பதிலும், சந்தைக்கு கொண்டு வருவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. வழக்கமாக தினமும் சுமார் 400 லாரிகளில் காய்கறிகள் வரும். தற்போது 250 லாரிகள் மட்டுமே வந்துள்ளன. இதனால், தேவை அதிகமாகவும், வரத்து குறைவாகவும் இருப்பதால் விலை உயர்ந்துள்ளது என்று வெங்காய வியாபாரிகள் சங்கத் தலைவர் வி.ஆர். சௌந்தரராஜன் தெரிவித்தார்.

 

வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு போன்ற அத்தியாவசிய காய்கறிகளின் மொத்த விலை கிலோ 20-30 ரூபாய்க்குள் சீராக உள்ளது. இவை சில்லறை விலையில் தரத்தைப் பொறுத்து 40-60 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.குளிர்கால காய்கறிகளான பீன்ஸ் போன்றவற்றை இந்த நேரத்தில் 50 ரூபாய்க்குள் எதிர்பார்க்கலாம்.

 

ஆனால், அவை மொத்த விலையில் 90 ரூபாய்க்கும், சில்லறை விலையில் 140 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன. அவரைக்காய் மொத்த விலையில் ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது சில்லறை விலையில் 100-120 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மழை குறைந்தால் காய்கறி விலைகள் குறைய வாய்ப்புள்ளது என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.

Right Menu Icon