--- --:--:-- --

தஞ்சை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!

8

த்திய கிழக்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை நிலவரப்படி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. இந்த அமைப்பு, இன்று வடக்கு, வடமேற்கு திசையில், மியான்மர் – வங்கதேச கடற்கரையை நெருங்க வாய்ப்பு உள்ளது.

 

ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அப்பால், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலுார், திருச்சி மாவட்டங்களில் சில இடங்கள், காரைக்காலில், இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Right Menu Icon