--- --:--:-- --

தெலங்கானா: 3 சகோதரிகள் உடல்கள் நசுங்கி பலி

6

தெலங்கானவில், அரசுப் பேருந்து மீது டிப்பர் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மூத்த சகோதரியின் திருமணத்திற்கு சென்று சொந்த ஊர் திரும்பிய 3 சகோதரிகள் உடல்கள் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. எதிர்பாராத விதமாக நடைபெற்ற விபத்தில் சகோதரிகள் 3 பேரும் ஒரே இருக்கையில் அமர்ந்து இருந்த நிலையில் உடல்கள் நசுங்கி மரணம் அடைந்து விட்டனர்.

 

இதனால் 4 மகள்களில் ஒரு மகளுக்கு நடைபெற்ற திருமணத்தை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டிய எல்லையா கௌடு குடும்பம் கடும் சோகத்தில் மூழ்கியது.

 

இந்நிலையில், விபத்தில் சிக்கி பலியான 3 சகோதரிகளின் உடல்களும் நேற்று மாலை சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அவர்களின் குடும்பத்தினர் உறவினர்கள் ஆகியோர் கதறி அழுதனர்.

Right Menu Icon