விடுபட்ட மகளிருக்கு உரிமை தொகை எப்போது?
விடுபட்ட மகளிருக்கு உரிமை தொகை எப்போது இருந்து வழங்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெறவுள்ள மூன்றாவது நாள் கூட்டத்தில் வினாக்கள் விடை நேரம் நடைபெறுகிறது. எம்.எல்.ஏக்கள் கேட்கும் வினாக்களுக்கு அந்தந்த துறையை சேர்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வந்தனர்.
அந்த வகையில் மகளிர் உரிமை தொகை குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் இந்த முகாம் மூலமாக 15 துறையில் வாயிலாக 45 சேவைகளும், நகரப்புறங்களில் 13 துறைகளின் சார்பாக 43 சேவைகளையும் அரசு மக்களுக்கு கொடுத்து வருகின்றது. இந்த முகாம்கள் மூலமாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கீழ் மனுக்கள் ஏற்கப்படும் என்று கூறினார்.
புதிதாக 28 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில் அதனை பரிசீலனை செய்து தகுதியான மகளிருக்கு வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார். அதே போல், நாடு திரும்பி பார்க்கும் வகையில் முதலமைச்சர் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை சென்ற 2023 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவுடைய பிறந்தநாள் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
மகளிர் பொருளாதார விடுதலைக்கு துணை நிற்கின்ற இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் சுமார் ஒரு கோடி 14 லட்சம் இந்த உரிமை தொகை முதலமைச்சர் வாங்கி வருகின்றார்கள்.
கடந்த 26 மாதங்களாக 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் துவங்கி இம்மாதம் 16ம் தேதி ஏற்கனவே ரூ.1000 கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை விண்ணப்பித்து பயன்பெறும் ஒரு கோடி 14 லட்சம் மகளிருக்கு தலா சுமார் 26 ஆயிரம் ரூபாய் அரசு கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




