அவிநாசியில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: கவுன்சிலரின் கணவர் மீது போக்சோ வழக்கு
திருப்பூர் மாவட்டம், அவிநாசி நகராட்சி கவுன்சிலரின் கணவர் ராஜேந்திரன் (வயது 45). ஒர்க் ஷாப் வைத்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட 16-வயது சிறுமிக்கு இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி, தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சிடையந்த சிறுமியின் பெற்றோர் அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து ராஜேந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் ராஜேந்திரனுக்கு உதவி செய்யும் வகையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரை மிரட்டியதாக பேரூராட்சி முன்னாள் துணை தலைவரான அதே பகுதியை சேர்ந்தவர் எம்.எஸ்.மூர்த்தி (48) மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




