இனி தமிழ்நாட்டில் மழை எப்படி..?- வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாடு, புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியிருப்பதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் அமுதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் அமுதா தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “வரும் 18 ஆம் தேதி கேரள – கர்நாடக பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என்றும், வரும் 24-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் மற்றொரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் எனவும் அமுதா தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது எனவும், வடமாவட்டங்களில் இயல்பை விட அதிக மழைப்பொழிவு இருக்க வாய்ப்புள்ளதென்றும் தெரிவித்தார்.
முன்னதாக தமிழ்நாட்டில் ஒருநாள் முன்கூட்டியே வடகிழக்கு பருவமழை தொடங்கியதாகவும், வரும் 24 ஆம் தேதி தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடையும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




