பட்டினம்பாக்கத்தில் த.வெ.க நிர்வாகிகளுடன் ஆலோசனை..!
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்த நிலையில், த.வெ.க தலைவர் விஜய் தனது பட்டினம்பாக்கம் அலுவலகத்தில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், சி.டி.நிர்மல் குமார் ஆகியோருடன் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன் மூலம், த.வெ.க தலைவர் விஜயின் அடித்த கட்ட நகர்வு என்ன? கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைப் நேரில் சந்திக்க எப்போது செல்வார், விஜய் தனது பரப்புரை சுற்றுப் பயணத்தைத் தொடர்வாரா என்ற கேள்விகள் அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுந்துள்ளன. கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி த.வெ.க தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. உயிரிழதந்தவர்களுக்கு தமிழக அரசு, த.வெ.க, பிரதமர் மோடி, காங்கிரஸ், வி.சி.க நிவாரணம் அறிவித்தனர். மேலும், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம், வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்த்து உத்தரவிட்டது. இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, தி.மு.க – த.வெ.க – பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சமூக ஊடகங்களிலும் ஊடகங்களிலும் மாறிமாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இதைத் தொடர்ந்து, கரூர் துயரம் தொடர்பாக த.வெ.க சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக த.வெ.க உடன் சேர்த்து 5 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
கரூர் துயரச் சம்பவம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை (13.10.2025) தீர்ப்பு அளித்தது. அதில், கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பம் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில், அவருடன் 2 ஐ.பி.எஸ் அதிகாரிகள் சி.பி.ஐ விசாரணையைக் கண்காணிப்பார்கள்.
மேலும், தமிழ்நாடு அரசு அமைத்த நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையத்தையும் உயர் நீதிமன்றம் ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் அமைத்த எஸ்.ஐ.டி-யையும் ரத்து செய்து உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, த.வெ.க தலைவர் விஜய் நீதி வெல்லும் என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்த நிலையில், த.வெ.க தலைவர் விஜய் தனது பட்டினம்பாக்கம் அலுவலகத்தில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், சி.டி.நிர்மல் குமார் ஆகியோருடன் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கரூர் துயரச் சம்பவத்துக்குப் பிறகு, த.வெ.க தலைவர்
விஜய், கட்சியின் மூத்த நிர்வாகிகள் அமைதியாக இருந்த நிலையில், இன்று விஜயின் பட்டினம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், த.வெ.க தலைவர்
விஜய் கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக கரூர் செல்வது தொடர்பாக ஆலோசனை நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.






