மதுரை மண் நீதி கேட்ட மண் – நயினார் நாகேந்திரன்
இது யாத்திரை அல்ல சுற்றுப்பயணம். தமிழக மக்களுக்காக நீதி கேட்கும் பயணம் என நயினார் நாகேந்திரன் மதுரையில் பேசியுள்ளார். இந்த மதுரை மண் நீதி கேட்ட மண், கண்ணகிக்கு நீதி கிடைத்த மண்.
எல்லோரும் என்றால் எல்லோரும் தான் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன் என விஜய்க்கு மறைமுக அழைப்பு விடுத்துள்ளார். வல்லபாய் பட்டேலுக்கு பிறகு இரண்டாவது இரும்பு மனிதர் அமித் ஷா என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.





