--- --:--:-- --

தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களுக்கு டெங்கு எச்சரிக்கை..!

2

மிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சென்னை, கோவை, கடலூர், தஞ்சாவூர், வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளதாக பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை இயக்குநர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழை மற்றும் பருவ கால மாற்றம் காரணமாக, டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாகக் கூறினார்.மேலும் கொசு உற்பத்தியாவதைத் தடுக்கவும் வளர்ந்த கொசுக்களை அழிக்கவும் தேவையான மருந்துகளை தயாராக வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சுயமாக மருந்து எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்று அறிவுறுத்திய சோமசுந்தரம், டெங்குவால் அண்மைக்காலமாக உயிரிழப்பு ஏதுமில்லை என்றும் கூறினார்.

Right Menu Icon