--- --:--:-- --

தங்கம் விலை : ஒரு சவரன் ரூ.90,720க்கும் விற்பனை

க்டோபர் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை ஏற்றத்தை சந்தித்து வருகிறது. நாளுக்கு நாள் உயரும் தங்கம் விலையால் சாமானிய மக்கள் நகையை நினைத்து கூட பார்க்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
ஒருவாரத்திற்கு மேலாக காலை, மாலை என தொடர்ந்து 2 நேரமும் தங்கம் விலை உயர்ந்து உச்சத்தை தொட்டு வரும் நிலையில், இன்று அதிரடியாக குறைந்துள்ளது நகை பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

 

அந்த வகையில் அக்டோபர் 09 ஆம் தேதியான நேற்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,425க்கும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,400க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இன்று காலை அக்டோபர் 10 ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.165 குறைந்து ஒரு கிராம் ரூ.11,260க்கும் சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ஒரு சவரன் ரூ.90,080க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதேபோல், 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.125 குறைந்து ஒரு கிராம் ரூ.9,330க்கும், சவரனுக்கு ரூ.1,000 குறைந்து ஒரு சவரன் ரூ.74,640க்கும் விற்பனையானது. வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.180க்கும், ஒரு கிலோ ரூ.1,80,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று மாலை அக்டோபர் 10 ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,340க்கும் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,380க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.75,040க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ஒரு கிராம் ரூ.184க்கும், ஒரு கிலோ ரூ.1,84,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Right Menu Icon