புரட்டாசி பவுர்ணமி: தி.மலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
இன்று புரட்டாசி மாத பவுர்ணமி என்பதால் பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு வசதியாக சேலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேபோல், ஆத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் பெங்களூரு ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த சிறப்பு பேருந்துகளைத் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லும் பக்தர்கள் பயன்படுத்தி கூட்ட நெரிசலை தவிர்க்கலாம் என்று அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.






