வெளிநாட்டுப் பயணிகளுக்காக புதிய இ-அரைவல் கார்டு
இந்தியா வரும் வெளிநாட்டுப் பயணிகள், குடியேற்றப் பிரிவு செயல்முறைகளை எளிதாகவும், வேகமாகவும் முடிக்க இ-அரைவல் கார்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவர்கள் இனி விமான நிலையத்தில் வரிசையில் நின்று காகிதப் படிவங்களை நிரப்பத் தேவையில்லை. பயணத்திற்கு முன்போ அல்லது வருகையின் போதோ ஆன்லைனில் எளிதாக இந்தப் படிவத்தை பூர்த்தி செய்யலாம்.






