தமிழ்நாட்டிற்கு ரூ. 4,144 கோடி விடுவித்த மத்திய அரசு..!
மாநிலங்களுக்கு ரூ. 1 லட்சம் கோடி நிதிப் பகிர்வை மத்திய அரசு இன்று விடுவித்துள்ளது. மாநிலங்கள் வாரியாக வழங்கப்படும் நிதி விபரங்களையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்திய அரசு தனது வரி வருவாயில் கிடைக்கும் நிதியில் குறிப்பிட்ட பகுதியை மாநிலங்களுக்கு பிரித்து வழங்கி வருகிறது.
நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையினை மாநிலங்களுக்கான நிதி பகிர்வு என்று அழைக்கிறார்கள். இந்த நிதியை தனது வளர்ச்சி, மேம்பாடு மற்றும் நலத்திட்டங்கள் போன்ற பல்வேறு செலவினங்களுக்குப் பயன்படுத்தலாம்.
இந்நிலையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு அக்டோபர் 10 ஆம் தேதி வழங்கப்படவிருந்த நிதியை 10 நாட்களுக்கு முன்னதாகவே இன்று மத்திய அரசு விடுவித்துள்ளது. இதன் அடிப்படையில் ரூ. 4,144 கோடி தமிழ்நாட்டிற்கு விடுவிக்கப்பட்டுள்ளது. மாநில வாரியாக தொகை விடுவிக்கப்பட்டுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




