--- --:--:-- --

இன்று இந்த மாவட்டங்களில் மழை வெளுக்கும் – வானிலை மையம்

1

சேலம் ஏற்காட்டில் கனமழை பெய்ததால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று காலை முதல் ஏற்காடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், இரவு நேரத்தில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

 

வாகன ஓட்டிகள் சிரமத்துடன் தங்களது வாகனங்களை இயக்கிச் சென்றனர். மேலும், மக்கள் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

 

சென்னையில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல, திண்டுக்கல் தேனி தென்காசி கன்னியாகுமரி திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Right Menu Icon