அமித்ஷா சொல்லி ஆனந்த் மூலம் கட்சி ஆரம்பித்துள்ளார் விஜய் – சபாநாயகர் அப்பாவு விமர்சனம்
செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு: “அமித்ஷா சொல்லி ஆனந்த் மூலம் கட்சி ஆரம்பித்துள்ளார் விஜய். முதல்வரை மிரட்டு தொனியில் இருந்தே பா.ஜ.க-டான் விஜயை இயக்குகிறது என்பது தெரிகிறது.
முதல்வரை, பிரதமரைப் பற்றி பேசும்போது மிகவும் கண்ணியத்துடனும் கவனத்துடனும் பேச வேண்டும். விஜயின் வார்த்தையில் கொஞ்சம் அகந்தை அதிகமாக இருக்கிறது. சினிமாவில் பேசுவது போல பேசுகிறார்.” என்று விமர்சனம் செய்துள்ளார்.






