--- --:--:-- --

வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..!

1

க்ஃபுக்கு சொந்தமானது என அறிவிக்கப்பட்ட சொத்து, அரசாங்க சொத்தா என்பதை ஆய்வு செய்ய ஆட்சியருக்கு வழங்கப்பட்ட அதிகாரம் உள்ளிட்ட சில பிரிவுகளுக்கு தற்காலிகமாக தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றிய வக்ஃபு சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

 

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் இடைக்கால உத்தரவை ஒத்திவைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, வக்ஃபு சட்டத்திற்கு முழுமையாக தடை விதிக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.

 

அதேநேரம், தனிப்பட்ட குடிமக்கள் உரிமை பற்றி முடிவெடுக்க ஆட்சியரை அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், வக்ஃபு நிலம் தொடர்பாக ஆட்சியருக்கு முடிவெடுக்க அதிகாரம் தரும் விதிக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். இதேபோன்று வக்ஃபு வாரியத்திற்கு சொத்து வழங்க 5 ஆண்டு இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு தடை விதிக்கப்பட்டது.

 

 

மத்திய வக்பு வாரியத்தில் இஸ்லாமியர் அல்லாத உறுப்பினர்கள் 4 பேரும், மாநில வக்ஃபு வாரியத்தில் இஸ்லாமியர் அல்லாத உறுப்பினர்கள் மூன்று பேரும் இருக்கலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் வக்ஃபு வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஒரு முஸ்லிமாக இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Right Menu Icon