கோவையில் அக். 9, 10 தேதிகளில் புத்தொழில் மாநாடு – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஒசூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவையில் அக். 9, 10 தேதிகளில் புத்தொழில் மாநாடு நடைபெறும்.
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களையும், முதலீட்டு வாய்ப்புகளையும் இந்த மாநாடு வழங்கும் என்றும் அவர் கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




