பாஜக கொள்கையோடு ஒத்துப்போய் நடப்பதுதான் திமுக ஆட்சி – சீமான்
பாஜகவின் எல்லாக் கொள்கையோடு ஒத்துப்போய் ஒரு ஆட்சி நடக்கிறது என்றால் அது திமுக ஆட்சிதான். ஆபரேஷன் சிந்தூரை ஆதரித்து முதன்முதலில் பேரணி நடத்தியவர் நம் முதல்வர் ஸ்டாலின்தான் ஆபரேஷன் சிந்தூரை ஆதரித்து உலகநாடுகளில் பிரதிநிதியாக பேசியவர் கனிமொழி குஜராத் கலவரத்தை ஆதரித்து பேசியவர்கள், மணிப்பூர் கலவரத்தை எதிர்த்து பேசினர்.
குஜராத் கலவரத்தை ஐயா கருணாநிதி, மாநில பிரச்னை என்று சொன்னாரா இல்லையா? குஜராத் கலவரத்தை இந்தக் கட்சியினர் பாராளுமன்றத்தில் ஆதரித்து பேசியது இருக்கிறதா? இல்லையா? அதே கட்சி, அதே ஆட்சியால் நடந்த மணிப்பூர் கலவரம் குறித்து நீங்கள் எதிர்த்து பேசியது பாராளுமன்றத்தில் இருக்கிறதா? இல்லையா? கூட்டணியில் இருக்கும்போது ஆதரித்து பேசினீர்கள், கூட்டணியில் இல்லாதபோது எதிர்க்கிறீர்கள் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளார்.






