--- --:--:-- --

டயர் வாங்கி விட்டு அதற்கான பணத்தை கொடுக்காமல் இளைஞர்கள் தப்பும் இளைஞர்கள்

1

தஞ்சாவூரில் ஆட்டோமொபைல்ஸ் கடையில் டயர் வாங்கிவிட்டு அதற்கான பணத்தை கொடுக்காமல் இளைஞர்கள் தப்பும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. மேரி பகுதியில் உள்ள மோட்டார் வாகன உதிரிபாகங்கள் விற்பனை மையத்திற்கு வந்த இளைஞர் ஒருவர் டயரை வாங்கி அதற்கான விலை குறித்து விற்பனையாளரிடம் பேசியுள்ளார். அப்போது தன்னுடன் வந்த நண்பருடன் இதனை வாங்கலாமா வேண்டாமா என்பது குறித்து கேட்க வெளியே சென்றார்.

 

தனது நண்பர் வருவதை பார்த்து இரு சக்கர வாகனத்தில் புறப்பட தயாராக இருந்த இளைஞர் அவர் வந்தவுடன் சிட்டாக பறந்தார். இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை கொண்டு விற்பனையாளர்கள் அந்த இளைஞர்களை பிடித்து பணத்தை வசூலித்ததாக கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon