தீபாவளி பரிசு கிடைத்துவிட்டது: தமிழிசை
GST வரியை குறைத்து மத்திய அரசு அறிவித்த நிலையில், மோடி சொன்னபடி தீபாவளி பரிசை கொடுத்துவிட்டதாக தமிழிசை தெரிவித்துள்ளார்.
மருத்துவத்துறையில் கொண்டுவரப்பட்ட வரி மாற்றம் நோயாளிகளுக்கு இருந்த பெரும் சுமையை குறைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், நாட்டு முன்னேற்றத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட மோடிக்கு, எதிர்க்கட்சியினர் பாராட்டு கூட்டம் நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.






