--- --:--:-- --

தமிழ்நாட்டில் மாதந்தோறும் மின் கட்டணம்!

1

தமிழ்நாட்டில் மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறை எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்து அமைச்சர் சிவசங்களர் விளக்கம் அளித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் செலுத்துவது என்ற நடைமுறையை மாற்றி, மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் திட்டம் கொண்டு வரப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தது.

 

திமுக ஆட்சி அமைத்த பின் இதுவரை மாதம் தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறை நடைமுறைப்படுத்தாமல் உள்ளது. மாதம் மின் கட்டணம் செலுத்தும் முறை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டுமென எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் தொலைநோக்கு திட்டங்கள் குறித்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர், கோவி.செழியன் ஆகியோர் சென்னை தலைமை செயலகத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

 

அப்போது மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறை எப்போது நடைமுறைக்கு வரும் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் சிவசங்கர், வீடுகளில் மின்வாரியத்தின் ஸ்மார்ட் மீட்டர் அமைக்கும் பணிகள் முடிவடைந்ததும் மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்படும். மாதம்தோறும் மின்கட்டணம் வசூலிப்பது பொதுமக்களுக்கு எளிமையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon