--- --:--:-- --

சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடிக் ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின்!

1

நாட்டின் 79 ஆவது சுதந்திரத் தினத்தை ஒட்டி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மூவர்ண் தேசிய கொடியை ஏற்றினார். இந்தியாவின் 79 ஆவது சுதந்திரத் தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திரத் தின விழாவில், பிரதமர் மோடிக்கு 96 வீரர்கள் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.

 

இதனையடுத்து, 22 குண்டுகள் முழங்க, விமானப்படையின் எம்.ஐ.17 விமானம் மூலம் மலர் தூவ, பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினார். பிரதமர் தேசியக் கொடியை ஏற்றியதும், தேசிய கொடியுடன், ஆபரேஷன் சிந்தூர் கொடியையும் ஏந்தியவாறு போர் விமானங்கள் வானில் பறந்தன.

இதனிடையே சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்ற சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். இதையடுத்து காவல்துறையின் அலங்கார அணிவகுப்பை வாகனத்தில் சென்றபடி முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். இதையடுத்து சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை முதல்வர் ஸ்டாலின் ஏற்றி வைத்தார்.

இதையடுத்து காவல் துறையின் 15 அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்களை தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன்படி, கூடுதல் டிஜிபி மஹேஷ்வர் தயாள், டிஐஜி மகேஷ், எஸ்பி சிலம்பரசன், ஏடிஎஸ்பி பிரவீன் குமார் மற்றும் இரண்டு டிஎஸ்பி-க்கள், 9 காவல் ஆய்வாளர்களுக்கு பதக்கங்கள் மற்றும் விருது பெறுவோருக்கு 8 கிராம் எடையுடைய தங்க பதக்கமும், ரூ.25,000 வழங்கப்பட உள்ளது.

Right Menu Icon