திருவாடானையில் ஆற்றங்கரை மகாலிங்கம் கோவிலில் மல்லிக்குடி ஆதீனம் அம்மாள் பால், மதுக்குட வீதி உலா நடைபெற்றது!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் மணிமுத்து ஆற்றங்கரையில் ஶ்ரீ மகாலிங்க மூர்த்தி கோவில் உள்ளது. இக்கோவில் காப்பு கட்டுடன் விழா துவங்கி வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் காவடி எடுத்தல் பூக்குழி திருவிழா, நடைபெறும்.
இந்நிலையில் கோவில் வளாகத்தில் மல்லிக்குடி ஆதீனம் அம்மாளுக்கு நூற்றுக்கணக்கான பெண்கள் விரதம் இருந்து பால், மது குடம், உற்சவ வீதி உலா நடைபெற்றது. கோவில் இருந்து துவங்கி திருவாடானை ரத வீதிகளில் வீதி விழா வந்து மீண்டும் கோவிலை அடைந்தனர். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த பாலால் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.






