--- --:--:-- --

மோடிக்கு எதிராக கருப்புக் கொடி – திருச்சியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

4

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், பிரதமர் மோடியின் திருச்சி வருகையைக் கண்டித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை அருகே நடைபெற்றது. ஜனநாயகம் குழி தோண்டிப் புதைக்கப்படுவதாகவும், சிறுபான்மையினர், ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஒடுக்கப்படுவதாகவும், தமிழ்நாட்டின் நலன்களும், நிதிகளும் மறுக்கப்படுவதாகவும் கூறி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்தனர். திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவரும், கவுன்சிலருமான எல். ரெக்ஸ் அறிவுறுத்தலின்படி, மாவட்ட பொருளாளர் முரளி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Right Menu Icon