திருவாடானை : சிநேகவல்லி அம்பாள் ஆடிப்பூரத் திருவிழா
திருவாடானை சிநேகவல்லி அம்பாள் ஆடிப்பூரத் திருவிழாவில் 5ம் நாள் வீதி உலாவில் கிளி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் வரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு சினேகவள்ளி அம்பாள் உடனமர் அருள்மிகு ஆதி ரெத்தினேஸ்வரர் சிவன் ஆலயம் உள்ளது.

இந்த ஆலய ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. 15 நாட்கள் நடைபெறும் விழாவில் 5ம் நாள் திருவிழாவில் முன்னதாக விநாயகப் பெருமான் மூஞ்சூறு வானத்திலும், அருள்மிகு சினேகவல்லி அம்பாள் கிளி வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியும், வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
வழிநெடுகிம் பக்தர்கள் பூஜைகள் செய்து வழிபட்டனர். சுவாமி வாகனங்களை 22 1/2 நாட்டார்கள் வீதி உலா இழுத்து வந்து கோவிலை அடைந்தனர்






