குழந்தையின் உடல் தோண்டி எடுத்து விசாரணை
மடத்துக்குளம் அருகே சாமராயப்பட்டியில் நேற்று முன்தினம் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது. இதனை அடுத்து உறவினர்கள் குழந்தையின் உடலை அடக்கம் செய்தனர்.
தகவல் அடிப்படையில் சென்ற கொமரலிங்கம் காவல்துறை நேற்று காலை வட்டாட்சியர் முன்னிலையில் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




