--- --:--:-- --

போக்குவரத்து துறை மூலம் புதிய வழிதட சேவைகள் தொடக்கம்!

3

புதுக்கோட்டையில் 9 புதிய பேருந்து வழித்தட சேவைகள் துவக்கம். புதுக்கோட்டை மாவட்டம், மாநகராட்சி, புதிய பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், 9 புதிய பேருந்து வழித்தட சேவைகள் துவங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முன்னோடித் திட்டமான, நகரப் பேருந்துகளில் மகளிர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில், புதுக்கோட்டையில் இருந்து உப்பிலிக்குடிக்கும், புதுக்கோட்டையில் இருந்து சடையம்பட்டிக்கும், புதுக்கோட்டையில் இருந்து தேனிப்பட்டிக்கும், புதுக்கோட்டையில் இருந்து தொண்டைமான் ஊரணிக்கும், திருச்சியிலிருந்து புதுக்கோட்டை வழியாக பெருமகளூருக்கும், தஞ்சாவூரிலிருந்து புதுக்கோட்டை வழியாக மதுரைக்கும், பொன்னமராவதியில் இருந்து மேலத்தானியத்திற்கும், அறந்தாங்கியில் இருந்து பெருமருதூருக்கும், கீரனூரில் இருந்து விராலிமலைக்கும் என மொத்தம் 9 புதிய பேருந்து வழித்தட சேவைகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

 

இதன்மூலம் புதுக்கோட்டையிலிருந்து மற்ற பகுதிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த பயன் அடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் பொதுமக்களின் அன்றாடப் போக்குவரத்திற்காகப் பேருந்து சேவைகள் நாள்தோறும் தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகிறது.

 

னவே, பொதுமக்களுக்குப் போக்குவரத்து வசதியினை எளிமையாக்கிடும் வகையில் இந்தப் பேருந்து சேவைகள் உரிய நேரங்களில் இயக்கிடும் வகையில் பணிகளை மேற்கொள்ளச் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon